ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு : அமெரிக்க Green Card திட்டம் இடைநிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), 'கிரீன் கார்ட்' (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன்
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய குறித்த மாணவன் கிரீன் கார்ட் திட்டத்தின் ஊடாகவே அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, அமெரிக்கக் குடியுரிமையை வழங்கும் இந்த குடிவரவு சேவைத் திட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து 50,000 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் 'கிரீன் கார்ட்' திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 6 மணி நேரம் முன்