கேடு கெட்டவேலைகளை செய்யாதீர்கள் :பொன்சேகா மீது கடும் காட்டம்
கட்சியில் இருந்து கொண்டு கேடு கெட்டவேலைகளை செய்யவேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகாவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் முயற்சிக்கு எதிராக சரத் பொன்சேகா நீதிமன்றம் செல்ல தயாராகி வருவதாக ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றம் செல்லவுள்ள பொன்சேகா
தவிசாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கினால் சரத்பொன்சேகா நீதிமன்றம் செல்லவுள்ளதான தகவல்கள் தனக்கும் கிடைத்துள்ளதாக மரிக்கார் தெரிவித்தார்.
அவ்வாறு இருப்பின் அதற்கான காரணங்களை கூற தயார் என தெரிவித்த மரிக்கார், திருமதி டயானா கமகேவின் இல்லத்தில் அதிபர் ரணில், பொன்சேகா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கேடுகெட்ட வேலைகளை செய்யாமல்
இவ்வாறான கேடுகெட்ட வேலைகளை செய்யாமல் அதிபரிடம் செல்லுங்கள், கட்சியில் இருந்தால் இணைந்து செயற்படுங்கள், அதிபருடன் இருக்கப்போவதாக இருந்தால் டாட்டா பாய் என கூறிவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |