டக்ளஸ் தேவானந்தாவுக்கு விரைவில் பிரித்தானியாவில் தடை!
தமிழர் தரப்பு அரசியல்வாதிகளில் சமகாலத்தில் அதிகமாக உற்று நோக்கப்படும் ஒருவராக டக்ளஸ் தேவானந்தா தொடர்கிறார்.
டக்ளசுக்கு மஹர சிறையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு தமிழ்முகம் அலறியுள்ளது.
எதிர்வரும் 9 ஆம் திகதி வரை டக்ளஸ் தேவானந்தாவுக்கு தடுப்புக்காவல் உத்தரவு வந்துள்ளதால் 2026 புத்தாண்டு தினம் தடுப்புகாவலில் தான் கழியப்போவது நிதர்சனம் தற்போது அவர் மீது பல ரி-56 ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் குறித்த விசாரணை துருவல்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், பிரித்தானிய அரசாங்கம் அவருக்கு விரைவில் தடையை விதிப்பதற்குரிய நகர்வுகளை செய்துவருவதாக நம்பகமான தகவல்கள் கிட்டியுள்ளன.
சிறிலங்காவின் படைத் தளபதிகளில் ஒருவரான கமல் குணரட்னாவுடன் சேர்த்து டக்ளஸ் தேவானந்தாவுக்கும் 2026 இல் இந்த தடை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு.......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |