கட்டுநாயக்கவில் பெண்கள் உட்பட நால்வர் அதிரடி கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 268.40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள "குஷ்" போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (29) காலை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அந்த போதைப்பொருட்களை தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து வாங்கி இந்தியாவின் மும்பைக்கு கொண்டு வந்து அங்கிருந்து, இன்று காலை 07.50 மணிக்கு இண்டிகோ விமானம் 6.E.-1185 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
20 கிலோகிராம் போதைப்பொருள்
சந்தேகநபர்களில் இருவர் பொரளை மற்றும் ஒருகொடவத்தை பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் என்றும் மற்ற இரு ஆண்களும் தெமட்டகொட மற்றும் ஒருகொடவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவர்கள் தங்கள் பயணப் பொதிகளில் 20 பொட்டலங்களில் 20 கிலோகிராம் 684 கிராம் "குஷ்" என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |