டக்ளஸிடமிருந்து அநுரவிற்கு பறந்த அவசர கடிதம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) மற்றும் காவல்துறை மா அதிபருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) அவசர கடிதமொன்று எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடக பரபரப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னன் நேற்று (09) டக்ளஸ் தேவானந்தா குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அனைத்து கருத்தும் முற்றிலும் புறம்பானவை.
கடந்த காலங்களில் எமது கட்சியின் செயற்பாட்டாளர்களாக இருந்து கட்சி நிலைப்பாடுகளுக்கு மாறாக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு செயற்படுகின்ற நாம் இவ்வாறான சமூக ஊடக பரபரப்புக்களை அலட்டக்கொள்ளவில்லை.
குற்றசாட்டுக்கள்
எமக்கு எதிரான குற்றசாட்டுக்கள் அனைத்தும் அந்தந்தக் காலப் பகுதில் எமக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய்கள் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
கடந்த காலத்தில் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ஆசாமிகள் தற்போது தம்முடைய நிகழ்ச்சி நிரலுக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மீது சேறு பூசுகின்றனர்.
தங்களுக்கு பின்னால் இருக்கும் தலைமைகளுக்காக அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை நோக்கி தனது சுட்டுவிரல்களை நீட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட படுகொலைகள் கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் அதற்கு யார் காரணமாக இருப்பினும் அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதற்காக தம்மிடமுள்ள ஆவணங்களையும் நாங்கள் சமர்பிக்க தயார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
