வீதிகளில் தவிக்கும் யாழ். மக்களுக்காக விசேட சேவை (படங்கள்)
யாழ் மக்களுக்காக மனிதநேயப் பணி
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கு இன்று குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையும், இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ்ப்பாணக் கிளையும் இணைந்து முதற் கட்டமாக 5 இடங்களில் குடிநீர் தாங்கிகளை இன்று வைத்துள்ளனர்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடியால், இடர்கால குடிநீர் சேவையாக இத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இடர்கால குடிநீர் திட்டம்
யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், யாழ். மாநகர ஆணையாளர் சி.த. ஜெயசீலன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
