பேருந்துக்குள் பெய்தது மழை - குடைபிடித்தபடி பேருந்தை ஓட்டிய சாரதி
பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்துக்குள் மழை பெய்ததால் அதில் நனையாமல் இருக்க சாரதி குடைபிடித்தபடி பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமுக வலைத்தளத்தில் வெளியான காணொளி
यह वीडियो गढ़चिरौली के अहेरी का है !
— Mumbai Congress (@INCMumbai) August 25, 2023
बारिश होने पर बस की छत टपकने से यह बात सामने आई है कि ड्राइवर बस में छाता लेकर बस चला रहा था!
यह हालत होगई है महाराष्ट्र के @msrtcofficial बस सेवा की, यात्रियों की सुरक्षा अब उपरवाले के भरोसे है!
वीडियो: @mumbaitak #Maharashtra #Gadchiroli pic.twitter.com/z5evosrfk6
இது தொடர்பாக சமுக வலைத்தளத்தில் வெளியான காணொளியில் மழை காரணமாக அரசு பேருந்தில் தண்ணீர் ஒழுகுகிறது. அதில் நனையாமல் இருக்க பேருந்து சாரதி குடை பிடித்தபடியே ஒரு கையில் பேருந்தை ஓட்டிச் செல்கிறார்.
இதுபோன்ற மோசமான நிலையில் உள்ள பேருந்துகள் இயக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.