யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் - 60 பேர் அடையாளம்

Sri Lanka Driving Licence
By pavan Jul 19, 2023 09:12 AM GMT
Report

யாழ். மாவட்டத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களையும் , அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ். காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கடந்த 08 ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினருக்கு காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை போலி சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க வந்த தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பில் போக்குவரத்து திணைக்களத்தினர் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்திருந்தனர்.

போலி சாரதி அனுமதி பத்திர கும்பல்

யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் - 60 பேர் அடையாளம் | Driving License Renewal Fake License Sri Lanka

அதேவேளை, திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும், இன்னுமொருவரும், போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுமார் 60 க்கும் அதிகமானோருக்கு போலி சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சையில் இரண்டு முறை தோற்றியும் சித்தியடைய தவறியவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று அதிக பணத்தினை பெற்று போலி சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளது.

குறித்த கும்பலுக்கும் மாவட்ட போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தாம் சந்தேகிப்பதால் , நீதிமன்ற அனுமதியினை பெற்று , மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து போலி சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கி வரும் கும்பலை கைது செய்யவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025