புடினின் வீட்டை நோக்கி சீறிப்பாய்ந்த 91 ட்ரோன்கள்...! முறியடிக்கப்பட்ட தாக்குதல் முயற்சி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், புடினின் வீட்டின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
இருப்பினும், ட்ரோன்களை நடுவானிலேயே அழித்து தாக்குதல் முயற்சியைத் தடுத்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ மற்றும் சேதமோ ஏறபடவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புடினின் வீட்டின் மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி குறித்து தகவல் அறிந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், புடினை தொடர்புகொண்டு உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, புடினின் வீட்டின் மீது தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்தாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |