அமெரிக்காவில் நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்!
அமெரிக்காவில் இரு உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் சிக்கி ஒரு விமானி உயிரிழந்த நிலையில் மற்றுமொரு விமானி படுகாயமடைந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அதிகாரிகள் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அட்லாண்டிக் கவுன்டியில் ஹாமண்டன் விமான நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
என்ஸ்ட்ரோம் எப்-28ஏ மற்றும் என்ஸ்ட்ரோம் 280சி ஆகிய இரு உலங்கு வானூர்திகள் இந்த விபத்தில் சிக்கியதாக பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்தின் போது, விமானிகளை தவிர வேற யாரும் பயணிக்கவில்லை.
சம்பவத்தில், ஒரு விமானி உயிரிழந்த நிலையில் மற்றுமொரு விமானி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த உலங்கு வானூர்திகள் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், உலங்கு வானூர்திகளின் வழித்தடம் மற்றும் தொலைத்தொடர்பு உள்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |