நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை நோட்டமிட்ட ட்ரோன்
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது பறந்து கொண்டிருந்த ட்ரோன் கமரா ஒன்று மின் உற்பத்தி நிலையத்தின் மீது வீழ்ந்துள்ளதுடன் விமானப்படை மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ட்ரோன் கமரா இன்று (23) பிற்பகல் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது மின் நிலைய வளாகத்தில் வீழ்ந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ட்ரோன் கமரா மூலம் லக்விஜய மின் உற்பத்தி நிலையப் பகுதியை படம் பிடித்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சிறப்பு விசாரணை
ஆனால், சட்டப்பூர்வ அனுமதியின்றி ஆலைக்கு மேலே ட்ரோன் கமராவை பறக்கவிடுவது சட்டவிரோதம் என்று தெரிவிக்கிப்படுகிறது.
இந்த நிலையில், ட்ரோன் கமரா பறக்க விடப்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |