யாழ். பருத்தித்துறையில் முன்னெடுக்கப்பட்ட போதை ஒழிப்பு நடவடிக்கை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்து.
பருத்தித்துறை காவல் நிலைய சமூக காவல்துறை பிரிவின் ஏற்பாட்டில் இன்று (15) குறித்த செயற்திட்டம் இடம்பெற்றது.
அதற்கமைய பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
போதை ஒழிப்பு செயற்திட்டம்
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவினால் போதை ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு அமைவாக போதை ஒழிப்பு அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டமும் நடைபெற்றது.

பிராந்திய உப காவல்துறை அத்தியட்சகர் திலக், பருத்தித்துறை காவல் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையில் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட நூற்றுக்கணக்கான முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


