யாழில் இருந்து சென்ற வாகனம் திருகோணமலையில் விபத்து
Sri Lanka Police
Jaffna
Trincomalee
Sri Lanka Police Investigation
By Independent Writer
Courtesy: Buharys Mohamed
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து திருகோணமலை (Trincomalee) நோக்கிச் சென்ற பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை - சேருநுவர காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் இன்று (15) காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஏறாவூருக்கு மீன் ஏற்றிச் சென்ற பட்டா வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில் குறித்த வாகனத்தில் பயணித்தோர் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த சேருநுவர வீதி போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |