கொழும்பு துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மன்னார் இளைஞன்!
கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிந்த இளைஞன், மன்னார் - முசலி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த பண்டாரவெளி பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய எம்.எம்.சஹிரி என்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன், முடிவெட்டுவதற்காக தனது நண்பர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சிகையலங்கார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கடை உரிமையாளர் உட்பட நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக மோதல்
பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ரி 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொழும்பு கரையோர காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 5 மணி நேரம் முன்