யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்: ஒருவர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(16.11.2024) காலை வட்டுக்கோட்டை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள் மற்றும் இரண்டு செப்புசுருள் என்பன காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்தறையினர் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், வட்டுக்கோட்டை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி சி.ஐ.கொஸ்தா தலைமையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |