யாழ்ப்பாணத்தில் கைதான 10 வயது சிறுவன் - வெளியான காரணம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவனே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு பல சிறுவர்களும்
மேலும், குறித்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில், உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோய்னை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் குறித்த சிறுவன் பயன்படுத்திய நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்