தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய போதைப்பொருள் : தொடர்பில்லை என்கிறார் படகு உரிமையாளர்
தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 54 கிலோகிராம் போதைப்பொருளுக்கும் தனக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை என குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் கடற்றொழில் படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தான் கொரியாவில் வசித்து வருவதாகவும் போதைப்பொருள் அல்லது வேறு குற்றச்செயல்கள் தொடர்பிலும் தன் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பலநாள் படகு
இறுதியாக, ஆழ்கடலுக்கு சென்ற பலநாள் மீன்பிடி படகு நாட்டின் கடல் எல்லையை கடந்து சட்டவிரோதமான தீவொன்றுக்குள் சென்றுள்ளதை அவதானித்த தனது தரப்பினர் காவல்துறையில் முறைப்பாடொன்றை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

வெலிகம காவல்துறையில் கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை வழங்கியதாகவும் அதற்கு பின்னர் பல சந்தர்ப்பங்களில் இது தொ்டர்பில் காவல்துறையில் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த படகு தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கடற்படைக்கு அறிவித்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, படகில் பொருத்தப்பட்டிருந்த படகை கண்காணிக்கும் இயந்திரமும் (VMS) நீக்கப்பட்டிருந்ததுடன் அது நீக்கப்பட்டு 36 மணித்தியாலங்களுக்கு செயற்படுத்தப்படுவதால் கடற்படையினர் அதனை கண்டுபிடித்ததாகவும் உரிமையாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |