ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை - மதுபானம் மீதான 30 சதவீத வரியை ரத்து செய்த துபாய்!

Dubai Tourism United Arab Emirates 2023
By Dharu Jan 02, 2023 08:33 AM GMT
Report

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் முக்கிய வர்த்தகப் பகுதியாக இருக்கும் துபாய் பிற வளைகுடா நாடுகளை விடவும் அதிகப்படியான விதிமுறை தளர்வு மற்றும் வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் துபாய் அரசு தனது வருவாயைக் கச்சா எண்ணெய் அல்லாத துறையில் முதலீட்டு வாயிலாக அதிகரிக்க முடிவு செய்திருக்கும் இதேவேளையில் சுற்றுலாத் துறையைச் சார்ந்தும் அதிக வருவாய் ஈர்க்கும் முடிவை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக மதுபான விற்பனை துபாய் முழுவதும் எளிதாக்கும் வகையிலும் அதேநேரத்தில் சுற்றுலா பயணிகல் மூலம் அதிக வருவாய் ஈர்க்கும் முயற்சியின் நோக்கிலும் இந்த முடிவை எடுத்துள்ளது.

30 சதவீத வரி

ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை - மதுபானம் மீதான 30 சதவீத வரியை ரத்து செய்த துபாய்! | Dubai Scraps Alcohol Fees Everything You Need Know 

துபாய் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஜனவரி 1 முதல் அனைத்து விதமான மதுபான விற்பனைக்கும் 30 சதவீத வரி விதிப்பை ரத்து செய்யவும், மதுபான விற்பனைக்குத் தேவையான உரிமங்களை இலவசமாகப் பெற அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் துபாய் அரசு குடும்பத்திற்கு கிடைத்து வரும் அதிகப்படியான மதுபான விற்பனை வருவாய் முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் துபாய் நாட்டின சுற்றுலாப் பயணிகளின் வருகையை இதன் மூலம் அதிகரிக்க முடியும்.

இதன் வாயிலாக கூடுதல் வருவாய் பெற முடியும் என நம்புகிறது. இதேபோல் மதுபானம் சார்ந்து துபாயில் தனி வர்த்தகச் சந்தை உருவாகும். இந்த அறிவிப்பு துபாய் நாட்டின் இரண்டு அரசு மதுபான விற்பனையாளர் நிறுவனங்களில் வெளியிடப்பட்ட புத்தாண்டு தின அறிவிப்பாகும்.

தளர்த்தப்பட்ட விதிமுறைகள்

ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை - மதுபானம் மீதான 30 சதவீத வரியை ரத்து செய்த துபாய்! | Dubai Scraps Alcohol Fees Everything You Need Know

இந்த நிறுவனங்கள் துபாய் ஆளும் அல் மக்தூம் குடும்பம் அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது. துபாயில் மதுபானம் விற்பனை மீதான பல ஆண்டுகளாகப் படிப்படியாகத் தளர்த்தப்பட்ட விதிமுறைகள் மூலம் இப்போது ரமலான் பண்டிகையின் போது பகல் நேரங்களில் மதுபானம் விற்கப்படுகிறது.

மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் தொடக்கத்தில் முடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் மதுபானம் “ஹோம் டெலிவரி” செய்யும் சேவை வழங்கப்பட்டது.தற்போது வரி ரத்து, இலவச உரிமம் போன்ற பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

துபாயின் பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவை கணிக்க முக்கியக் காரணியாக மது விற்பனை அளவீட்டை நீண்ட காலமாக முக்கியமான அளவு கோளாக உள்ளது. சமீபத்தில் கத்தார் நாட்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, துபாயின் பல பார்கள் சர்வதேச ரசிகர்களை ஈர்த்தது.

தொடர் வளர்ச்சி

ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை - மதுபானம் மீதான 30 சதவீத வரியை ரத்து செய்த துபாய்! | Dubai Scraps Alcohol Fees Everything You Need Know

எமிரேட்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மதுபான விநியோகஸ்தர் மரிடைம் மற்றும் மெர்கன்டைல் இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில்,

“100 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் துபாயில் எங்கள் வர்த்தகத்தைத் துவங்கியதில் இருந்து இன்று வரையில் தொடர் வளர்ச்சி பாதையிலும் புத்துணர்ச்சி உடனும் உள்ளது.சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு வரும் விதிமுறைகள் மூலம் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் மதுபானங்களைப் பாதுகாப்பான முறையில் பொறுப்பான கொள்முதல் மற்றும் நுகர்வை உறுதி செய்வதற்கு முக்கியக் கருவியாக உள்ளது.

நீங்கள் இனி மக்கள் யாரும் மதுபானத்திற்காக மற்ற எமிரேட்டுகளுக்கு ஓட வேண்டியதில்லை" என்று கூறியுள்ளது.

துபாய் சட்டத்தின்படி

ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை - மதுபானம் மீதான 30 சதவீத வரியை ரத்து செய்த துபாய்! | Dubai Scraps Alcohol Fees Everything You Need Know

துபாய் மக்கள் நீண்ட காலமாக மொத்தமாக மற்றும் வரி இல்லாத மதுபானங்களை வாங்குவதற்காக உம் அல்-குவைன் மற்றும் பிற எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று வந்தனர்.  

துபாய் சட்டத்தின்படி, “முஸ்லீம் அல்லாதவர்கள் மது அருந்துவதற்கு 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். துபாய் காவல்துறையால் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டைகளை எடுத்துச் சென்று தான் மது வாங்கவும், மது கொண்டு செல்லவும் மற்றும் மது உட்கொள்ளவும் அனுமதிக்கும்.

துபாய் காவல்துறையால் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டைகள் இல்லாத பட்சத்தில், மதுவுடன் காவல் துறையிடம் சிக்கினால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் கைது செய்யப்படலாம்.”என கூறப்பட்டுள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026