வேகமாகச் சுழலும் பூமி - குறையும் நாளின் நீளம்: ஜூலையில் நடக்கும் அதிசயம்
சமீபத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விடயம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி பூமி தற்போது இயல்பை விட வேகமாகச் சுழன்று வருகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 09, 12 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய திகதிகளில் நேரம் சிறிது குறைவாகும் என்பதை உணரக்கூடிய நிலை ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
நாளின் நீளம் குறைகிறது
இவ்விதமான சுழற்சி வேக அதிகரிப்பு 2020ஆம் ஆண்டில் ஆரம்பமாகியுள்ளது.
இது 1.3 முதல் 1.5 மில்லி செக்கன் வரை குறையும் இவ்வாறு தொடர்ந்து நடைபெறுமானால் 2029ஆம் ஆண்டில் சில செக்கன்களை நேரத்திலிருந்து கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்
பூமியின் சுழற்சி வேகம் மாறுபடுவதால், ஒரு நாளின் நீளம் குறைகிறது அல்லது அதிகரிக்கிறது. தற்போது பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்ததால், ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தை விடக் குறைவாக இருக்கும்.
வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள்
இது பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற காரணிகளால் ஏற்படுகிறது.
பூமியின் குறைந்து வரும் சுழற்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்ள அணு கடிகாரங்களில் லீப் வினாடிகள் (Leap Second ) சேர்க்கப்படுகின்றன.
பூமியின் இந்த வேகமான சுழற்சி நேரத்தின் பாதையில் தொடர்ந்து சுற்றி வருவதால் 2029 ஆம் ஆண்டளவில், முதல் முறையாக ஒரு லீப் வினாடியை நீக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
