ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகள்: மஹ்தி விசனம்
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று ஐந்து வருடங்கள் கழித்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எம் மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தகவலை இன்று (30) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “270 பேர் கொல்லப்படுவதற்கும் 500 இற்கும் மேற்பட்டவர்கள் ஊணப்படுத்துவதற்கும் கோடிக் கணக்கான சொத்துகள் அழிக்கப்படுவதற்கும் இனமுறுகல் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்த ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாத பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை ஏன் சேவையில் வைத்துள்ளீர்கள்?
தேசிய பாதுகாப்பு
அவர்களுக்கு ஏன் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்குகின்றீர்கள்? இத் தாக்குதலின் காரணமாக எந்த சம்மந்தமும் இன்றி முஸ்லிம்களும் கத்தோலிக்க கிறிஸ்தவ அப்பாவிகளுமே பாதிக்கப்பட்டார்கள்.
நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாத அதிகாரிகள் அரச பணிக்கே தகுதி அற்றவர்களாகும்.
பதவி நீக்கம்
எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை மா அதிபர், பிரதி காவல்துறை மா அதிபர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் போன்ற அனைவரையும் அதிபர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அல்லது அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |