கோட்டாபயவுக்கு பாப்பரசர் கடும் செய்தி
இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சக்தி எதுவென்பது குறித்து அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டுமென பாப்பரசர் பிரான்சிஸ் விடுத்துள்ள கோரிக்கை காரணமாக இலங்கை அரசாங்கம் புதிய அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் 60 பேர் உட்பட சுமார் 3,500 இலங்கையர்களின் முன்னால் இந்தக் கருத்தை வெளிப்படுத்திய பாப்பரசர் பிரான்சிஸ், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இவ்வாறான வெளிப்படுத்தல் தான் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும், நாட்டிற்கும் அமைதியைக் கொண்டுவரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வத்திக்கான் ஒரு குட்டி நகர தேசமாக இருந்தாலும் அது ஒரு நாடு என்ற அடிப்படையில் அதன் தலைவரான பாப்பரசர் வெளிப்படுத்திய இந்தக் கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் முறையாக பதிலளிக்காமல் விட்டால் அது ராஜபக்சர்களை அனைத்துலக அரங்குவரை இழுத்துச்செல்லும் என்பது முக்கியமான விடயமாகும்.
இதன் மேலதிக தகவல்களுடனும், நிகழ்கால நிதர்சனங்களுடனும் வருகிறது இன்றைய ஐபிசி தமிழின் செய்தி வீச்சு,
