சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கர்தினாலுக்கு கிடையாது - மைத்திரி ஆவேசம்!
2019 Sri Lanka Easter bombings
Easter
Maithripala Sirisena
Easter Attack Sri Lanka
By Pakirathan
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் கர்தினாலுக்கு வழங்கப்படவில்லை.
இதற்குரிய அதிகாரம் நீதித்துறை அல்லது பிரதம நீதியரசர் ஆகியோருக்கே உள்ளது."
இவ்வாறு, முன்னாள் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்திரி
தொடர்ந்து அவர்,
"நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
அபராதத்தை செலுத்தாவிட்டால், என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
இதற்குரிய அதிகாரம் நீதித்துறைக்கு அல்லது பிரதம நீதியரசருக்கு உள்ளது, கர்தினாலுக்கு கிடையாது."
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (19) காலை சென்று வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி