உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் - 75 மில்லியன் செலுத்திய பூஜித்
Easter
Easter Attack Sri Lanka
Channel 4 Easter Attack
By Thulsi
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 75 மில்லியன் ரூபாவை முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர (Pujith Jayasundara) செலுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி குறித்த தொகையை செலுத்தி முடித்துள்ளார்.
நட்டஈட்டுத் தொகை
முன்னாள் காவல்துறை மா அதிபர் முழுத் தொகையையும் 8 தவணை முறைகளில் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்