தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
அதன்படி 114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்குச்சீட்டு அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகள் இன்று (07) தபால் திணைக்களத்திடம் (Postal Department) ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்தார்.
தபால் திணைக்களம்
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார (S. R. W. M. R. P. Sathkumara) குறிப்பிட்டார்.
தொடர்புடைய தபால் சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று பிற்பகல் அல்லது நாளை (08) ஆரம்பமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தபால் மூல வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார (Pradeep Pushpakumara) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
