கோட்டாபயவிற்கு எதிராக சர்வதேச பிடியாணை: பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தல்
பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தல்
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்க பிரித்தானிய முனைப்பு காட்ட வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றில் லிபரல் கட்சியின் தலைவர் இட் டேவி நேற்றைய தினம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளை உறுதி செய்யும் நிபந்தனையின் அடிப்படையில் இலங்கைக்கு உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும், வரிக்குறைப்பு, பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளினால் நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உதவிகள்
எனவே இலங்கைக்கு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உதவிகளை வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பொருளாதார பொதி வழங்க வேண்டும் எனவும் அதில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சாக்களை கைது செய்வற்கான சர்வதேச பிடியாணை அடங்கிய அரசியல் பொதி உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் இட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
