நாட்டை அழித்தவர்களே பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கூக்குரல் இடுகின்றனர் – சாணக்கியன்
நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (08) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், நாட்டை அழித்தவர்களே பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்திய வம்சாவழியினரின் குடியுரிமை
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “இலங்கை முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளைப் பார்க்கின்ற போது பொருளாதார பிரச்சினைகளுக்கு மூல காரணமாக கடந்த பல வருட காலமாக இடம்பெற்றுள்ள பிரச்சினைகளை கூறலாம். இப் பொருளாதார பிரச்சினைகளுக்கு 1948 இலிருந்து ஆட்சி புரிந்த அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்.
D.S. சேனநாயக்க இந்திய வம்சாவழியினரின் குடியுரிமையினைப் பறித்தார். இலங்கைப் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவது ஆடைக் கைத்தொழிலாக இருக்கின்ற போதிலும் தேயிலையின் ஊடாகவே அதிக ஏற்றுமதியை நாம் பெறுகின்றோம்.
இவ்வாறு 1948 இலிருந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவிய தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாம் என்ன உதவிகளை செய்துள்ளோம்?
இந்திய தமிழர்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சியே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம்” என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
