பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள் : இழக்கப்படும் அநுர அரசு மீதான நம்பிக்கை
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவு செய்யப்பட்தையடுத்து பொருளாதார மாற்றம் குறித்து மக்கள் பாரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இருப்பினும், தற்போது அநுர அரசாங்கம் மீதான மக்களின் எதிர்பாப்பு குறைவடைந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த மக்கள், ஒரு நாளுக்கான ஊதியமாக 2000 பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் பொருட்களின் விலை அதிகரிப்பால் அதுவும் போதியளவில் இல்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது, அடுத்தடுத்து வரும் பண்டிகைக்காலங்களில் இது மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அநுர அரசாங்கம் சிறிய சிறிய மாற்றங்களை முன்னெடுத்திருந்தாலும் கூட அது போதியளவில் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு உதவவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |