நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள்

Christmas Batticaloa Jaffna Sri Lanka
By Sathangani Dec 25, 2024 08:53 AM GMT
Report

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நத்தார் ஆராதனைகள் நடைபெற்றது.

நத்தார் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide

புத்தளம்

புத்தளம் அன்னை ஷாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.

ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.

இதன்போது அருட்சகோதரிகள் ஆயர்கள், குருக்கள் மற்றும் பக்த அடியார்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

மலையகம்

மலையகத்தில் ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை எட்வின் ரொட்ரிகோ அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றதுடன் இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் இடம்பெற்றதுடன் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide

அம்பாறை

நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர் தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

பங்குத்தந்தை பேதுறு ஜீவராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இவ்வாராதனையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக வழிபாடுகளில் பங்கு கொண்டிருந்தனர்.

அத்துடன் தேவாலயத்தை சுற்றி இராணுவம், காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide

மன்னார்

இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நத்தார்  நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.

மன்னார் மாவட்டத்தின் பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நத்தார் ஆராதனைகள் நடைபெற்றது.

குறித்த ஆரானைகளின் போது நாட்டு மக்களை பாதுகாக்கவும், நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நத்தார் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர், அருட்தந்தையர்கள், ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

ஆராதனையின் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide 

திருகோணமலை

மூதூர் - இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் நத்தார் நள்ளிரவு ஆராதனை அருட்தந்தை அன்ரன் சேவியர் அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நத்தார் நள்ளிரவு ஆராதனையில் அதிகளவு கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு - குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை இடம்பெற்றது

இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸன் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.

இவ் ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். 

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide

இதேவேளை மட்டக்களப்பு - தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை இடம்பெற்றன.

இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை தேவதாஸ்ன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.

இவ் ஆராதனையில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide

இதேவேளை மட்டக்களப்பு - பிள்ளையாரடியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்திலும் நத்தார் தின ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

இயேசு பாலகனின் பிறப்பை பற்றிய பாடல்கள் பாடி இங்கு ஆராதனைகள் நடைபெற்றன.

நத்தார் தின கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, கிறிஸ்தவ மாணவர்களுக்கு இயேசு பாலகனின் பிறப்பின் மகத்துவம் பற்றிய ஆசி உரைகளும், பிரதான போதகரால் வழங்கப்பட்டன.

இந்த நத்தார் தின ஆராதனையில் பெருமளவிலான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide

யாழ்ப்பாணம்

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில், இன்று (25) நள்ளிரவு இடம்பெற்றது.

யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஆராதனைகள் நடைபெற்றது.

யேசுபாலனின் பிறப்பைக் கொண்டாடும் கத்தோலிக்க மக்கள் பெருமளவில் ஆராதனை நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.

ஐபிசி தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

ஐபிசி தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

நிகழ்வில் கலந்துகொண்டோர் 

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட 51 இராணுவ தலைமையகம் மற்றும் யாழ்.மறை மாவட்ட ஆயர் இல்லம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனைகள் | Christmas Midnight Services Held Islandwide

ஆராதனை நிகழ்வில் யாழ்.மறை மாவட்ட ஆஜர் அதி வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞானபிரகாசம் ஆண்டகை, யாழ். மாவட்ட குரு முதல்வர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பிரதமர் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் மானத ஜகம்பத் 513 வது படை பிரிவின் கட்டளை தளபதி, 51 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் நிசாந்த முத்துமால, 513 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் பிரசாந்த ஏக்கநாயக்க பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

சுற்றுலாத் துறையில் 2 மில்லியன் இலக்கை எட்டவுள்ள இலங்கை

சுற்றுலாத் துறையில் 2 மில்லியன் இலக்கை எட்டவுள்ள இலங்கை

வுவுனியா சிறைச்சாலையில் 8 கைதிகள் விடுதலை

வுவுனியா சிறைச்சாலையில் 8 கைதிகள் விடுதலை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026