வுவுனியா சிறைச்சாலையில் 8 கைதிகள் விடுதலை
Christmas
Vavuniya
Prison
By Sathangani
வவுனியா (Vavuniya)விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் இன்று (25) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
8 பேர் விடுதலை
அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி புத்திக பெரெரா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி