காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள் - தடுமாறும் அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு
அமெரிக்கா ஈரான் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நிறுத்தி வருவதால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அப்பகுதியில் குண்டுவீச்சு நடத்திய பதிலடித் தாக்குதல்களை தெஹ்ரான் நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தும் வரை ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்கள் தங்களின் தாக்குதல் இலக்குகள் குறைந்து வருவதாகவும், அமெரிக்க ஆயுதக் களஞ்சியம் காலியாகி வருவது குறித்தும் கவலை தெரிவித்ததை அடுத்து, அமெரிக்கா தமது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள்
இதேவேளை, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இது குறித்த பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள எவரையும் விட எங்களிடம் அதிகமான ஆயுதங்கள் உள்ளன, மேலும் எங்களுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகவே உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீது 13 இரவுகள் தீவிரமாக அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் எவ்வித தாக்குதல்களும் பதிவாகவில்லை.
அத்துடன் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள அண்டை நாடுகள் மீதும் ஈரானும், கடந்த இரண்டு நாட்களாகத் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.
தெஹ்ரானின் நிலைப்பாடு தாக்குதலுக்குத் தாக்குதல் என்பதாகவே தொடர்வதாகவும், தாக்குதல்கள் நின்றால், ஈரானும் தனது நடவடிக்கைகளை நிறுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
மசகு எண்ணெய் விலை
அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, கடந்த வியாழக்கிழமை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்த பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெய், தற்போது 92 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது.
இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 85 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |