பதிலடிக்கு பதிலடி: ஈரானின் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரான்மீது அமெரிக்கப்படைகள் எந்தத் தாக்குதலையும் தொடுக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா மீதான பதில் தாக்குதலையும் நிறுத்தவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதலை நிறுத்தி வைத்திருக்கும் வரையே ஈரானின் இந்த அமைதி என்றும், அதேசமயம் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது குறித்து நம்பிக்கையை விட சந்தேகமே அதிகமாக உள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
பரஸ்பரம் தாக்குதல்
ஈரான் - அமெரிக்கா இரண்டு நாடுகளும் மாறி மாறி கடந்த 13 நாட்களாக தாக்குதல்களை தொடுத்து வந்தநிலையில், இந்த வார இறுதியில் ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது.

இதனைத்தொடர்ந்து தற்போது ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போரை தீவிரப்படுத்த ட்ரம்ப் பரிசீலித்து வந்ததாகவும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் இதுகுறித்து கவலை தெரிவித்தாகவும், அதன்பேரிலேயே இஸ்லாமிய குடியரசின் மீதான தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை குறித்து பேச்சு
அதேசமயம் அமெரிக்காவின் போர்ச்செலவும் அதிகரித்து வருகிறது.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகை செய்யவே அமெரிக்கா இந்த அவகாசத்தை வழங்கியுள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக ஈரானும், ஓமானும் தெஹ்ரானில் ஹோர்முஸ் நீரிணை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |