கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு விவகாரம்: விசாரணையில் சிக்கிய சந்தேக நபர்
கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடையின் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10.09.2026) இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள்
கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியதுடன், கொலைக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25