தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்...! முன்னாள் அமைச்சருக்கு பிணை
புதிய இணைப்பு
உரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) பிணை வழங்கியுள்ளது.
முதலாம் இணைப்பு
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையானது இன்று (10.09.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டது.

குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |