நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு பயணம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் புறப்படுவதற்கு முன்னர், இன்று காலை நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் கோயிலுக்கு செல்லவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகளை, குறிப்பாக இராமாயணம் போன்ற பண்டைய புராணங்களுடன் உள்ள பொதுவான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று வெளியுறவு அமைச்சின் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொது இராஜதந்திர பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொட்ரிகோ கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளி தோட்ட சமூகம்
நுவரெலியா பயணத்தின் போது, இலங்கையின் இந்திய வம்சாவளி தோட்ட சமூகத்தினரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக கடந்த 08 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தார்.
இந்தப் பயணத்தின்போது, இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவால் (ஓய்வு) வரவேற்கப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25