நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித்த விமானத்தை நெருங்கி வந்த ட்ரோன்
நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட்டபோது ட்ரோன் ஒன்றினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக நோர்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.
மல்டோவிய வான்வெளியில் நுழைந்த இரு ரஷ்ய ட்ரோன்கள் காரணமாக, செவ்வாய்க்கிழமை கிஷினாவ் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதனால் அந்நாட்டின் தலைநகருக்கு வரவிருந்த பல விமானங்கள் மல்டோவாவுக்கு வெளியே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதுடன் வான்வெளியிலேயே காத்திருக்கப் பணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜெலென்ஸ்கியின் விமானம்
இந்நிலையிலேயே, மல்டோவாவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலென்ஸ்கியின் விமானம் ட்ரோன் ஒன்றால் தாக்கப்படும் நிலை ஏற்பட்டதாக நோர்வே பிரதமர் கூறியுள்ளார்.

Image Credit: kyivindependent
எவ்வாறாயினும், ஜெலென்ஸ்கியின் விமானம் தொடர்பான நார்வே பிரதமரின் இந்தக் கூற்று குறித்து மல்டோவா அதிகாரிகள் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |