போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
தங்கள் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தெஹ்ரானை பொருளாதார ரீதியாக ஒடுக்குவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்கள் எங்கள் கடற்படைக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்; அப்படித் தாக்கும்போது, அதற்கான விலையை அவர்கள் தங்கள் எண்ணெய் கப்பல்களை இழப்பதன் மூலம் கொடுக்க வேண்டியுள்ளது.
கப்பல்கள் மீதான தாக்குதல்கள்
அவர்கள் எங்கள் கப்பல்களைத் தாக்குவதில் வெற்றிபெறுவதில்லை, மாறாக ஐந்து எண்ணெய் கப்பல்களை இழக்கிறார்கள்" என்று செய்தியாளர்களிடம் ரூபியோ கூறியுள்ளார்.

Image Credit: maalaimalar
மேலும் கருத்து வெளியிட்ட அவர், அதற்கான விலையை அவர்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்களைப் பொருளாதார ரீதியாக ஒடுக்கும் நடவடிக்கையையும் தாங்கள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |