ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்த அதிரடி தீர்மானம்!!
Ministry of Education
Ceylon Teachers Service Union
By Kanna
ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வெளியான சுற்றுநிரூபம்
மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த தீர்மானம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் என கல்வி அமைச்சு சுற்று நிரூபத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தேசிய பாடசாலை, சாதாரண பாடசாலை என்ற வேறுபாடின்றி ஆசிரியர்களை இவ்வாறு சேவைக்கு அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தடையின்றி கல்வியை வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்