லண்டனில் திரையிடப்பட்ட ஈழத்து திரைப்படம் "வெந்து தணிந்தது காடு "
பிரித்தானியாவின் இரண்டாவது ஈழத்து திரைப்படமான "வெந்து தணிந்தது காடு " என்ற திரைப்படம் லண்டனில் திரையிடப்பட்டது.
இந்த திரைப்படமானது கடந்த 9 ஆம் திகதி Alperton community school இல் உள்ள பிரத்தியேக தியேட்டர் வடிவிலான மண்டபத்தில் நுங்கு குழுமத்தினால் திரையிடப்பட்டது.
ஈழமக்களின் வாழ்வியலையும், அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத வழி போராட்டம் என்பவற்றை உள்ளடக்கி, ஈழத்து கலைஞனான மதிசுதா என்பவரால் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தை பல மக்கள் பார்வையிட்டதோடு இதற்கான ஆதரவுகளை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஈழத்து படைப்புகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் நோக்கில் இயங்கும் நுங்கு குழுமத்தினர், இந்த திரைப்படத்தை வெளியிட்ட திரள் , சுடரி ,kili people ஆகிய அமைப்புகளுக்கும் , விளம்பர அனுசரணை வழங்கியவர்களுக்கும் , ஊடக அனுசரணை வழங்கியவர்களுக்கும் நன்றி கூறுவதோடு , திரைப்படத்தை பார்வையிட வந்த மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/09d4932a-9329-41ef-a605-58b0f8111dbc/23-64ad6826500fc.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)