முட்டை - கோழி இறைச்சி விலைகள் தொடர்பில் வெளியான தகவல்
ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழிக்கறியின் விலையில் மாற்றம் இருக்காது என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சி தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை 1000 ரூபாவிற்கும் குறைவாக பேணுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக அஜித் குணசேகர மேலும் கூறியுள்ளார்.
கோழி இறைச்சி உற்பத்திகள்
இதேவேளை, எதிர்காலத்தில் வெளிநாட்டிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கோழி இறைச்சி உற்பத்திகள் அதிகளவில் காணப்படுவதாகவும் தவிசாளர் அஜித் குணசேகர தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மரக்கறிகளின் விலை அதிகரிப்புடன், முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு பாரிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |