வடக்கு - கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காவல் நிலைய கட்டளைத் தளபதி பதவிகளில் பல வருடங்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டம்
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ளவர்களில் கொழும்பு மாவட்டத்தின் கீழ் காவல் நிலைய கட்டளைத் தளபதிகள் பலர் கடமையாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர்களுக்கும் நிலையத் தளபதி பதவிகள் வழங்கப்படவுள்ளதன் காரணமாக இவ்வாறு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளளன.
ஆணைக்குழுவின் அனுமதி
இதன்படி, காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னர் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த வாரமும் 5 பிரதி காவல்றை மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் உதவி காவல்றை அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |