முட்டை விலை 65 ரூபா வரையில் உயரும் அபாயம் : வெளியான தகவல்
முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க (Sarath Ratnayake) தெரிவித்துள்ளார்.
உற்பத்தி சார் விலைகள் மும்மடங்கு அதிகரிப்பால் கோழி தீவனத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலையை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை உற்பத்தி
தற்போது ஒரு முட்டையின் உற்பத்தி விலை சுமார் 38 ரூபாய் என்றும் ஆனால் விவசாயி ஒரு முட்டையை 30 தொடக்கம் 31 ரூபாய்க்கு ஏழு ரூபாய் நஷ்டத்தில் விற்பனை செய்வதால் பலரும் பண்ணை உற்பத்தியினை கைவிட்டுள்ளனர்.
இந்தநிலையில், கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு முட்டை விலை 60 தொடக்கம் 65 ரூபாய் வரைக்கும் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |