வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம்

Sri Lanka Police Vavuniya Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024 Vanni
By Sathangani Nov 14, 2024 01:29 PM GMT
Report

புதிய இணைப்பு

வன்னி தேர்தல்மாவட்டத்தில் 65.5சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பி,ஏ. சரத்சந்திர தெரிவித்தார்.

இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை இடம்பெற்றது.

வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது

வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது

வாக்கெண்ணும் பணி

அந்தவகையில், வன்னிமாவட்டத்தில் 65.5 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது, வவுனியாவில் 63.75 வாக்குகளும், முல்லைத்தீவில் 62.45 வாக்குகளும், மன்னாரில்70 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளது.

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் | Election Ballot Box Distribution Start In Vanni

இந்நிலையில், இதுவரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எவையும் இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்பு செயற்ப்பாடுகள் இடம்பெற்று முடிந்துள்ளது.

தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

எண்ணுவதற்கான நடவடிக்கை

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் | Election Ballot Box Distribution Start In Vanni

மாலை 4.30மணியளவில் தபால் மூலமான தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மாலை 7மணியளவில் ஏனைய வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. . இதேவேளை இன்று நள்ளிரவுக்குள் முடிவுகளை அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

மூன்றாம் இணைப்பு

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வன்னி தேர்தல் தொகுதி மன்னார் (Mannar) மாவட்டத்திற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று (13) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் | Election Ballot Box Distribution Start In Vanni

மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் வி.சிவராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

432 வேட்பாளர்கள் போட்டி

மன்னார் மாவட்டத்தில் இம்முறை 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 432 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

23 கட்சிகளும் 25 சுயேட்சை குழுக்கள் உள்ளடங்கலாக 48 கட்சிகள் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் | Election Ballot Box Distribution Start In Vanni

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையமாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் 8 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு தரப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் மத்திய நிலையம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டுவரும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெடுப்பு நிலையங்களிற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் | Election Ballot Box Distribution Start In Vanni

இதேவேளை முல்லைத்தீவில் 89,889 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக காவல்துறையினர் மற்றும் 1653 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

வன்னிதேர்தல் (Vanni) மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் வவுனியா (Vavuniya) அரச அதிபருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

காவல்துறையினரின் பாதுகாப்புடன் வன்னிதேர்தல் மாவட்டத்தில் உள்ள 387வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், மற்றும் வாக்குச்சீட்டுகள் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

வாக்களிப்பு நிலையங்கள்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் | Election Ballot Box Distribution Start In Vanni

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்களும் முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களும் மன்னாரில் 98வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த நிலையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் ஏனைய ஆவணங்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் இருந்து இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டது.

இதேவேளை வன்னிதேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 306,081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேர்தல் கட்மைகள் 

அந்தவகையில் வவுனியாவில் 128,585 பேரும் முல்லைத்தீவில் 86, 889 பேரும் மன்னாரில் 90, 607 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக வன்னியில் 4,995 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 3,898 காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் | Election Ballot Box Distribution Start In Vanni

தேர்தல் குறித்து இதுவரை 107 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் 50 முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் 22 முறைப்பாடுகளும், முல்லைத்தீவில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளது.

இதேவேளை வவுனியாவில் சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியும், மன்னார் மாவட்டத்தில் மாவட்டச்செயலகமும், முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

கடந்த கால ஊழல் - மோசடி சம்பவங்கள் : அரசு முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

கடந்த கால ஊழல் - மோசடி சம்பவங்கள் : அரசு முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்