யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுபொருட்களும் இன்றைய (13) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் (Election Election Commission) ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
வாக்குப் பெட்டிகள்
வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் காவல்துறை பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.
வாக்குப் பெட்டியை ஏற்றியவாறு முதலாவது பேருந்து இன்று காலை 8.30 மணிக்கு புறப்பட்டது.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பில் ஈடுபட்டனர்
இதன்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |