மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனி, அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், இந்த நியமனம் தொடர்பில் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின் படி, தனது மகன் மொஜ்தபா தன்னைத் தொடர்ந்து உச்சத் தலைவராக வரக் கூடாது என்று அலி கமேனி குறிப்பிட்டிருந்ததாக தெரியவருகிறது.
IRGC - இன் அழுத்தம்
இருப்பினும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) அழுத்தத்தால் மொஜ்தபா உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஈரானில் உச்சத் தலைவரை தேர்வு செய்வது நிபுணர்கள் சபை என்ற மத அறிஞர்கள் குழுவின் பொறுப்பு. ஆனால் இந்த முறை அந்த நடைமுறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில ஊடக அறிக்கைகளின் படி, புரட்சிகர காவல்படை நிபுணர் சபைக்கு அழுத்தம் கொடுத்து முடிவை மாற்றச் செய்ததாகவும், இதனால் சில மத அறிஞர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மொஜ்தபா கமேனி அந்த குழுவில் பெரும்பான்மை வாக்குகளை கூட பெறவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |