தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட சமையல் எரிவாயு விலை...!
தமிழ்நாட்டிலும் வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பதிலுக்கு ஈரானும் அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு சருகின்றது.
இதனால் உலகளவில் எரிபொருள் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர்கள்
இதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளன.
இதனடிப்படையில், வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 60 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூபாய் 928.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 115 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூபாய் 2.043.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மூன்று வாரத்திற்கான தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதால் விலையேற்றம் இருக்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் விலை உயர்ந்துள்ளதுமை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |