அடுத்த ஆண்டு முட்டையின் விலை 40 ரூபா - வெளியான தகவல்
Food Shortages
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
அடுத்த சித்திரை புத்தாண்டின் போது முட்டையினை 35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு தயாராகி வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம் சரத் ரத்நாயக்க, முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு அதனை இலவசமாக வழங்கவும் தயாராகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் முட்டை விலை
சில வெதுப்பக உரிமையாளர்கள் முட்டை விலையினை காரணம் காட்டி, வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரித்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
தற்போது, முட்டை கோழிகளின் பெருக்கங்கள் அதிகரித்துள்ளன.
எனவே, எதிர்காலத்தில் முட்டை விலையினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்