ஒடிசாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது!
இந்தியாவின் நர்சிப்பட்டினத்திலிருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு ஷிலவதி ரக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நாதாவரம் காவல்துறையினரால் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா-ஒடிசா எல்லையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட முதலாவது தடவை இதுவே என இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதுடன் 28 வயதான அவர் பெங்களூரு வழியாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
பெண் சந்தேகநபர்
குறித்த பெண் சந்தேகநபர் ஒடிசாவிலிருந்து கஞ்சா போதைப்பொருள் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு வழங்குவதற்காக நர்சிப்பட்டினத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்ததாகவும், தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக பெங்களூரு மற்றும் கோயம்புத்தூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஒரு வலையமைப்பை நிறுவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடனான தொடர்புகளைப் பயன்படுத்தி குறித்த கும்பல் இலங்கைக்கு கஞ்சா போதைப்பொருளை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சிறிய பொதிகளில் கஞ்சாவை விற்பனை செய்து வந்தமையும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |