தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் அனைத்து மாவட்ட பிரதி/ உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுப்பிய கடிதம் வாபஸ்
இதேவேளை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, இது தொடர்பில் தெரிவிக்கையில்,வேட்புமனுக்களை பெற்றுக் கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சஜித் வெளியிட்ட அறிவிப்பு
இதனிடையே மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
