அரசின் தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழு கடும் எதிர்ப்பு
Election Commission of Sri Lanka
Government Of Sri Lanka
By Sumithiran
உள்ளூராட்சி மன்றங்களை மேற்பார்வையிட பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரின் பிரதிநிதி ஒருவரை நியமிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கை
உள்ளூராட்சி நிறுவனங்களின் மேற்பார்வைக்காக பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவரின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்தத் தீர்மானமானது உள்ளூராட்சி மன்றங்களை அரசியல்மயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்