மாகாண சபைத்தேர்தல்: கையாலாகாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு
அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, பொருளாதார சுதந்திரமோ, சட்ட சுதந்திரமோ இல்லை என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்த இறுதி முடிவுக்காக தேர்தல் ஆணைக்குழு காத்திருக்கிறது.
எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது
கடந்த11 ஆண்டுகளாக மாகாண சபைத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்த அரசாங்கத்தின் முடிவுக்காகக் காத்திருப்பதால், தேர்தல்களை நடத்துவது தொடர்பா, ஆணைக்குழு எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது.
2017 ஆம் ஆண்டில், உள்ளூராட்சித் தேர்தல்களைப் போலவே, 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் கலப்பு உறுப்பினர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
10 மாதங்களில் மூன்று தேர்தல்
இருப்பினும், கலாநிதி கே. தவலிங்கம் தலைமையிலான எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
கடந்த 10 மாதங்களில், நாங்கள் மூன்று தேர்தல்களை நடத்தினோம். எங்களிடம் சட்ட அதிகாரம் இருந்திருந்தால், இதைத் தாமதப்படுத்த முடியாது.
அரசாங்க ஒப்புதல் இல்லாமல் தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு பொருளாதார அல்லது சட்ட சுதந்திரம் இல்லை.
பழைய தேர்தல் முறையைத் தொடர்வதற்கு, அமைப்பினுள் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான ஒரு பிரிவு அல்லது தீர்மானம் தேவை என்றும் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
